×

85 விமானங்கள் ரத்து

புதுடெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேற்று சுமார் 85 விமானங்களை ரத்து செய்துள்ளது. விமான பணியாளர்கள் கடைசி நேரத்தில் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுத்ததால் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று சுமார் 85 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது மொத்த எண்ணிக்கையில் 23 சதவீதமாகும்.

இந்நிலையில் 25 ஊழியர்களுக்கு நிர்வாகம் பணிநீக்க கடிதங்களை வழங்கியுள்ளதாக தெரிகின்றது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் 20 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

The post 85 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Air India Express ,Dinakaran ,
× RELATED ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர்...